நடிகர் விஷாலுக்கு அபராதம் விதித்தது சென்னை நீதிமன்றம்: எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூபாய் ஒரு கோடி வரை வரி செலுத்தாததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஜிஎஸ்டி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் பத்து முறையும் அவர் நேரில் ஆஜராக வில்லை என்பதை அடுத்து நடிகர் விஷாலுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறையினரால் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.