சென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு! தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்றும் 3வது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என தகவல் வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சென்னையில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2000க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளது பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 என அதிகரித்துள்ளது

மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனையடுத்து சென்னையில் மொத்தம் 66,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2214 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 60,592 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 36,164 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 13,06,884 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது