செவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செவிலியர்களின் சேவை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உலகில் செவிலியர்கள் சேவைக்கு ஈடு இணை இல்லை என்றும் அவர்களது சேவை மகத்தானது என்றும் பல அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக செவிலியர் தினத்தை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஒன்றின் மருத்துவர்கள் இணைந்து ‘எஞ்ஜாய் எஞ்ஜாமி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் செவிலியர்களின் சேவை, அவர்களின் மகத்தான தன்னிகரில்லா பணி குறித்து வாழ்த்துக்கள் கூறும் வரிகள் உள்ளன.
இந்த பாடலுக்கு அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், டெக்னீசியன் உள்பட பலர் நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai doctors' song and dance on International Nurses Day.
— J Sam Daniel Stalin (@jsamdaniel) May 12, 2021
Courtesy: Rela Hospital#ThankYouNurses #nursesday2021 pic.twitter.com/4IMQ36qQKS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments