7 வயது சிறுவனுக்கு 526 பற்கள்: சென்னை டாக்டர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனுக்கு 526 பற்கள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு அவ்வப்போது வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. மூன்று வயதில் இருந்தே சிறுவனுக்கு இந்த பிரச்சனை இருந்திருந்தாலும் அவனது பெற்றோர் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் தற்போது ரத்தம் அதிகமாக வரத்தொடங்கியதை அடுத்து அவனது பெற்றோர் சிறுவனை சவீதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அந்த சிறுவனின் கீழ் தாடையின் உள்ளே நூற்றுக்கணக்கான பற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சர்ஜரி செய்து அனைத்து பற்களையும் வெளியே எடுக்க மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த சர்ஜரிக்கு பின்னர் சிறுவனின் கீழ்தாடையில் இருந்து சிறியதும், பெரியதுமாக 526 பற்கள் அகற்றப்பட்டது. மொத்த பற்களின் எடை 200 கிராம் இருந்ததாக தலைமை மருத்துவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று நாட்களில் அந்த சிறுவன் முழுவதும் குணமடைந்துவிடுவான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகிலேயே ஒரு மனிதருக்கு அதிக பற்கள் அகற்றப்பட்டது இந்த சிறுவனுக்குத்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com