பிரபல நடிகையின் நிர்வாண படத்தை ஆன்லைனில் லீக் செய்த சென்னை இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

சென்னையை சேர்ந்த இயக்குனர் ஒருவர்  பிரபல இந்தி நடிகை மற்றும் மாடலுமான அவந்திகாவின் நிர்வாண படத்தை விலைக்கு வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை அவந்திகா காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளார்.

வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க நிர்வாண படம் தேவைப்படுவதாக சென்னையை சேர்ந்த ராகேஷ்நாத் என்ற இயக்குனர் நடிகை அவந்திகாவிடம் அணுகியதாகவும், வெப்சீரிஸில் நடிக்கும் ஆசையால் நிர்வாண படத்தை அவரிடம் அவந்திகா அளித்ததாகவும், ஆனால் அந்த இயக்குனர் தனது நிர்வாண படத்தை ஆன்லைன் நிறுவனம் ஒன்றுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டதாகவும், நடிகை அவந்திகா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

ஹாலிவுட் இயக்குனரான ஜேசன் பெர்ணான்டஸ் என்பவர் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றுக்காகத்தான் நடிகை அவந்திகாவிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளார் என அவந்திகாவின் மேனேஜர் கூறியுள்ளார். 

ஆனால் தங்கள் நிறுவனம் யாரிடமும் நிர்வாண படத்தை கேட்கவில்லை என்றும்,  இயக்குனர் ராகேஷ்நாத் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் ஜேசன் பெர்ணான்டஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


 

More News

விஷால் ரசிகர்களுக்கு இன்று இரட்டை மகிழ்ச்சி

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. கடந்த புதன் அன்று பாதி திரைப்படம் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டு

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பிக்பாஸ் நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ஓவியா என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வை விட

விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

இன்று விஷாலின் இரும்புத்திரை, அரவிந்தசாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் நடிகையர் திலகம்

விசுவாசம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர்

தல அஜித், நயன்தாரா நடித்து வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் ஏற்கனவே ரோபோசங்கர் யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம்.