சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவிற்கு நடுவிலும் தங்கம் கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கடும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நேற்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்கத்துறை இலாகா அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். மேலும் இந்தப் போதைப் பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு பெட்டியில் இருந்த மசாலா பொட்டலங்களை கைப்பற்றி இருக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் அந்த மசாலா பாக்கெட்டுகளில் மசாலாக்கள் இல்லாமல் வேறு எதோ பொருள் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு அதிகாரிகள் பரிசோதித்து இருக்கின்றனர். அது முற்றிலும் சூடோபீட்ரின் எனும் ஒரு வகை போதைப்பொருள் என்பது கண்டுபிடிக்கப் ‘பட்டு இருக்கிறது.
பின்பு இந்த கூரியரை அனுப்பியது யார் என விசாரித்து சென்னையில் உள்ள சாதிக் (37) என்பவரை கைது செய்து விசாரித்தபோது மேலும் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதில் செல்வம் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களரூவில் இருந்து இந்தப் போதைப் பவுடரை வாங்கி ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயற்சித்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதை பெங்களூருவில் இருந்து அனுப்பினால் மாட்டிக் கொள்வோம் என சென்னையில் இருந்து அனுப்ப முடிவு செய்து கான் (30) மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த அந்தோனி (41) என்பவர்களின் உதவியை நாடியிருக்கிறார்.
இவர்களின் உதவியோடு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு இந்த போதைப் பொருட்களை கடத்த முயற்சித்தது தெரியவந்து இருக்கிறது. ஆனால் விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் 3 கிலோ அளவுள்ள (ரூ.30 லட்சம்) போதைப் பொருட்களை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments