ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடந்த திங்கள்கிழமை அன்று பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் 19,900 கோடி மதிப்புக் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த தம்பதியினர் தற்போது டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் போதைப்பொருள் இருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பலில் வந்த 2 கன்டெய்னர்களை சோதனையிட்டனர்.
அதன் அடிப்படையில் ஒரு கன்டெய்னரில் 1999 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் மற்றொரு கன்டெய்னரில் 988 கிலோ எடையுள்ள ஹராயின் போதைப்பொருள் பிடிப்பட்டது. இந்த ஹெராயின் போதைப்பொருள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் 80-90% போதைப்பொருளை உற்பத்தி செய்யும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் இந்தியாவில் உள்ள சிலருக்கும் இந்தப் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தம் இருக்கலாம் என்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் விசாகப்பட்டினம் ஆஷ் டிரேடிங் நிறுவனத்திற்கு முகத்திற்கு பூசக்கூடிய பவுடர் எனும் பெயரில் ஈரான் நாட்டிலுள்ள பந்தர் அப்பாஸ் எனும் துறைமுகத்தில் இருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு ஹெராயின் கடத்திவரப்பட்ட விவகாரம் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
தற்போது 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் வைஷாலி எனும் தம்பதியினரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லியில் வைத்து கைது செய்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments