சென்னையில் இன்று முதல் என்னென்ன தளர்வுகள்: மாநகராட்சி அறிக்கை

இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்குவதை அடுத்து பொதுமக்கள் மேலும் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு கட்ட ஊரடங்கு போல் இன்றி, இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவதூ;

அனைத்து அரசு மற்றும்‌ பொதுத்துறை நிறுவனங்களின்‌ கட்டுமான பணிகள்‌, சாலை பணிகளுக்கு அனுமதி. பணிகள்‌ நடைபெறும்‌ இடத்திலேயே தொழிலாளர்கள்‌ தங்கும்‌ வசதி இருந்தால்‌ பிற கட்டுமான பணிகளுக்கு அனுமதி.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில்‌ உள்ள நிறுவனங்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி நிறுவனங்களில்‌ 25% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்‌) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம்‌ சார்பில்‌ ஏற்பாடு செய்யப்படும்‌ வாகனங்களில்‌ மட்டுமே பணியாளர்கள்‌ வர வேண்டும்‌.

தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்கள்‌ 10% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்‌) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம்‌ சார்பில்‌ ஏற்பாடு செய்யப்படும்‌ வாகனங்களில்‌ மட்டுமே பணியாளர்கள்‌ வர வேண்டும்‌.

அத்தியாவசிய பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

அத்தியாவசிய பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ மின்‌ வணிக நிறுவனங்கள்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில்‌ செயல்படலாம்‌.

உணவகங்களில்‌ காலை 6 மணி முதல்‌ இரவு 9? மணி வரை பார்சல்‌ மட்டும்‌ வழங்கலாம்‌.

முடி திருத்தகங்கள்‌,//அழகு நிலையங்கள்‌ தவிர அனைத்து தனி கடைகள்‌, ஹார்டுவேர்‌, சிமெண்ட்‌, கட்டுமான பொருட்கள்‌, மின்சாதனப்‌ பொருட்கள்‌ விற்பனை கடைகள்‌, மொபைல்‌ போன்‌, கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள்‌, மின்‌ மோட்டார்‌, கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 11 மணி முதல்‌ மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

பிளம்பர்‌, எலக்ட்ரிஷியன்‌, ஏசி மெக்கானிக்‌, தச்சர்‌ போன்ற பணியாளர்கள்‌, சிறப்பு தேவை உள்ளோருக்கான வீட்டு வேலை பணியாளர்கள்‌ https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தின்‌ வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம்‌.

மேலும்‌ இது தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்‌ 33% பணியாளர்களுடன்‌ தொடர்ந்து செயல்படும்‌.

வேளாண்‌ சார்ந்த பணிகள்‌, தொழில்கள்‌, தொழில்‌ மற்றும்‌ வணிக செயல்பாடுகள்‌, மருத்துவ பணிகள்‌ மற்றும்‌ அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும்‌ துறைகள்‌, வங்கிகள்‌, அம்மா உணவகங்கள்‌, ஆதரவற்றோர்‌ இல்லங்கள்‌ எந்தவித தடையும்‌ அல்லாமல்‌ தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்‌.

கண்டோன்மெண்ட் எனப்படும்‌ கட்டுப்பாட்டுப்‌ பகுதிக்கு எந்தவித தளர்வுகளும்‌ கிடையாது. மக்கள்‌ அனைவரும்‌ அரசுக்கு ஒத்துழைப்பு தந்து முகக்கவசம்‌ அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

More News

என் கணக்கு தப்பாய் போனதில் ரொம்ப மகிழ்ச்சி: கஸ்தூரி டுவீட்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது

கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க தலைவரே: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரசிகரின் கோரிக்கை

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் முதல் முறையாக தயாரிக்கும் திரைப்படம் '99 சாங்ஸ்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தன

சென்னையில் மட்டும்  200ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு: நாளை முதல் அமல் என தகவல்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது

ஒரு கையில் குழந்தை, மறு கையில் சூட்கேஸ்: 265 கிமீ நடந்து சென்ற இளம்பெண்

கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி மே 17ஆம் தேதி முடிவடைகிறது.