சென்னையில் இன்று முதல் என்னென்ன தளர்வுகள்: மாநகராட்சி அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்குவதை அடுத்து பொதுமக்கள் மேலும் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு கட்ட ஊரடங்கு போல் இன்றி, இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவதூ;
அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகளுக்கு அனுமதி. பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கும் வசதி இருந்தால் பிற கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் 25% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9? மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
முடி திருத்தகங்கள்,//அழகு நிலையங்கள் தவிர அனைத்து தனி கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் விற்பனை கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
பிளம்பர், எலக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் போன்ற பணியாளர்கள், சிறப்பு தேவை உள்ளோருக்கான வீட்டு வேலை பணியாளர்கள் https://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம்.
மேலும் இது தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
வேளாண் சார்ந்த பணிகள், தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் எந்தவித தடையும் அல்லாமல் தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.
கண்டோன்மெண்ட் எனப்படும் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எந்தவித தளர்வுகளும் கிடையாது. மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னையில் ஊரடங்கு விதிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்.
— Greater Chennai Corporation (@chennaicorp) May 4, 2020
சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து, அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்க மக்களை வேண்டுகிறோம்.
#Covid19Chennai
#GCC #Chennai
#ChennaiCorporation pic.twitter.com/0Q4v0x9tov
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout