4000ஐ தாண்டிய ராயபுரம், 3000ஐ தாண்டிய தண்டையார்பேட்டை: சென்னை கொரோனா நிலவரம்
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டிவிட்டது என்பதும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3000ஐ தாண்டிவிட்டது என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 23,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 4023பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 3019 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2646 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2539 பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2273 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 2068 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1325 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1088 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் ஆகிய ஆறு மண்டலங்களில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதால் இந்த ஆறு மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/3EzFZiX0YV
— Greater Chennai Corporation (@chennaicorp) June 9, 2020