மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை மாநகராட்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கொரோனாவால் மரணம் அடைந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவசர அவசரமாக அவரது நண்பர் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி மத வழக்கப்படி அடக்கம் செய்தார்.
இந்த நிலையில் தனது கணவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் கிறிஸ்துவர் முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு சைமன் மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சைமன் மனைவியின் கோரிக்கை தொடர்பாக பொது சுகாதாரதுறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டதாகவும், அவ்வறிக்கையின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளதால், ஆனந்தி சைமன் அவர்களது கோரிக்கையை ஏற்பது சாத்தியம் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout