கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமை: அரசின் அதிரடி அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 1407 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் சென்னையில் கூடுதல் கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் முதல் கட்டமாக சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுக்கு ஒரு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றில் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி அறிவிப்பு சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராயபுரம் ஹோமில் 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் உதவி

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ்

தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இரண்டாம் பாதியாவது சந்தோஷமா இருக்குமா? கவினின் புலம்பல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகர் கவின், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து வருகிறோம்.

மொட்டை தலைக்கு முத்தம் கொடுத்த அமலாபால்: நிலவின் ஒளியில் காதல்!

நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

சென்னையில் 1407 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் எகிறி கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.