ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் மக்கள் பணியில் துப்புரவு தோழர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சியை சேர்ந்த 14,291 துப்புரவு பணியாளர்கள் சென்னை சாலைகளில் உள்ள குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவேடின்படி 88.2% துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். 1900 பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்பதும் இவர்களில் 1013 பணியாளர்கள் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் மட்டுமின்றி எந்த ஒரு இயற்கை பேரிடரின்போதும் விடுமுறை இன்றி மக்களுக்காக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களின் சேவைக்கு வேறு எந்த சேவையும் ஈடு இணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
As most of us stay indoors in Chennai, 14,291 conservancy workers have reported for work on the city's streets to clean and remove garbage. @chennaicorp says that's an attendance percentage of 88.2.
— Siddharth TOI (@SiddharthPTOI) March 27, 2020
Only around 1900 are absent, of which 1013 are on authorised leave #COVID19
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments