சென்னை தி.நகர் கடைகளை மூட உத்தரவு: கொரோனா படுத்தும் பாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள், மால்கள், கடைகள் ஆகிவற்றை மூட வேண்டும் என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. மேலும் பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியாக சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று தி.நகர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூடவேண்டும் என்றும் ஏடிஎம்களை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தி நகரில் உள்ள கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டு உள்ளதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது