சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான 9 இடங்களில் கடைகள், அங்காடிகள் திறக்க சென்னை மாநகராட்சி தடை விதித்தது
கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பிரிக்கில்ன் சாலை வரை, ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவிமையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல்அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி விதித்த தடை இன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது. மேலும் தடையை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிடவில்லை என்பதால் இன்று காலை முதல் சென்னை ரங்கநாதன் தெரு உள்பட தடை செய்யப்பட்ட 9 பகுதிகளிலும் இன்று முதல் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments