வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி!

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது என்பதும் இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே

குறிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர் என்பதும் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி அடைந்து வரலாற்று சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. ஒருபக்கம் நடராஜன் பந்துவீச்சில் அசத்திய வந்த நிலையில் இன்னொரு பக்கம் வாஷிங்டன் சுந்தர் ஆல்-ரவுண்டராக அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி முக்கிய பதவி ஒன்றை அளித்துள்ளது

இதுகுறித்து சென்னை மாநகராட்சி பதிவு செய்துள்ள டுவிட்டில், ‘சென்னை மாவட்டத்தின் தேர்தல் விழிப்புணர்வு தூதராக வாஷிங்டன் சுந்தரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 100% தேர்தலில் வாக்களிக்க உறுதியேற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமனம் செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயலலிதா விழா நடத்தலாம், இதை மட்டும் நடத்தக் கூடாதா? கமல்ஹாசன் கேள்வி

குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? என உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொல்லார்டு மாதிரி பொளந்து கட்டுறார்: யோகிபாபுவின் மாஸ் பேட்டிங் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஒருசில

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது

ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா? ரிசர்வ் வங்கி விளக்கம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது.

பறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…

இந்தியக் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் ஒரு படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.