சென்னையில் விசா வாங்க வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் போலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு மார்ச் 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தேதியில் விசா மையத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்
மார்ச் 15ஆம் தேதி சென்னை விசா மையத்திற்கு வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களாகவே முன்வந்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை விசா மையத்தின் முகவரிக்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்திற்கு அதே நாளில் அதாவது மார்ச் 15ஆம் தேதி சென்று வந்த அனைவரும் வீட்டிற்குள்ளேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விபரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள் தயவுசெய்து இந்த தகவலை பரவலாக பகிருங்கள். அந்த இடத்திற்கு அதே நாளில் சென்ற அனைவருக்கும் இதை தெரியப்படுத்தவும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதே நாளில் விசா மையத்திற்கு சென்றவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை எண்ணான 044 2538 4520 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments