கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? மாநகராட்சி விளக்கம்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சில நிமிடங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென கொரோனா ஸ்டிக்கரை ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த ஸ்டிக்கரை அகற்றினார்கள் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
இந்த நிலையில் கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
கமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி உடனடியாக அகற்றியது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்.