19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்!
- IndiaGlitz, [Wednesday,September 18 2019]
சென்னையை சேர்ந்த கல்லூரி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என போலீஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை பூந்தமல்லி பலராமன் நகரைச் சேர்ந்த அஸ்வதா என்ற 19 வயது கல்லூரி மாணவி தனது வீட்டிற்கு எதிரே குடியிருந்த சின்னராஜ் என்பவருடன் காதல் கொண்டார். இந்த காதல் நாளடைவில் மலர்ந்து திருமணம் வரை சென்றது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கல்லூரி படிப்பின்போது காதல் எதற்கு? என்று அவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சின்னராஜாவை கடந்த 15ஆம் தேதி நெல்லையில் உள்ள கோவில் ஒன்றில் அஸ்வதா திருமணம் செய்து கொண்டார். தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தங்களை பூந்தமல்லி மற்றும் நெல்லை போலீசார் உதவியுடன் தனது பெற்றோர்கள் மிரட்டுவதாகவும் எனவே தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சென்னை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து அஸ்வதா புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பி.இ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் அஸ்வதா, கல்லூரி காலத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் காதல் கொள்வது தவறு என்று பெற்றோர்கள் அறிவுறுத்தியும் கேட்காமல் அவர் பிடிவாதமாக காதலில் உறுதியாக இருந்ததோடு, பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தற்போது அவரது கல்வியை பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல கல்வி கற்று, நல்ல வேலைக்குச் சென்று, ஒரு உயர்ந்த நிலைக்கு வந்தவுடன் காதல் குறித்து முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியும் அவசரப்பட்டு அஸ்வதா திருமணம் செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சில மாதங்கள் மட்டுமே பழகிய காதலருக்காக 19 வருடங்கள் பெற்று, வளர்த்து, பாசம் வைத்த பெற்றோரை எதிர்த்து நிற்பதோடு அவர்கள் மீது போலீசிலும் புகார் கொடுப்பது சரியா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது