மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் மிஸ் இந்தியா போட்டி சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி அனுக்ருதி வாஸ் என்பவர் பட்டத்தை தட்டியுள்ளார். அவருக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா' இறுதி போட்டியில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னை லயோலா கல்லூரியில் பிஏ படித்து வரும் அனுக்ருதி வாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷில்லர் மகுடம் சூட்டி கெளரவித்தார்.
நடனம், மாடலிங் மற்றும் சினிமா ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அனுக்ருதி இந்த படத்தை வென்றதன் மூலம் இந்தியாவில் இருந்து மிஸ் வேர்ல்ட் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஹரியானாவின் மீனாட்சி சௌத்ரி என்ற பல் மருத்துவ கல்லூரி மாணவி இரண்டாவது இடத்தையும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்றா கட்டிட கலைஞர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout