சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்தி கொலை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற மாணவியை இளைஞர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மாணவி அஸ்வினி உயிரிழ்நதார். மாணவி அஸ்வினியை கொலை செய்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்த நபரின் பெயர் அழகேசன் என்று தெரியவந்துள்ளது.

மாணவி அஸ்வினியை அழகேசன் என்பவர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன,.

More News

எச்.ராஜாவின் அட்மினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த பதிவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,

அஜித்துடன் 50 நாட்கள் சுற்றப்போகும் காமெடி நடிகர் யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இன்றே நிறுத்துங்கள், இல்லையேல்...எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்

நடிகை, நடன இயக்குனர் என கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் காயத்ரி ரகுராம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவர் பிரபலம் அடைந்தார்

வேற எவன் வந்தாலும் சரி! யாரை கூறுகிறார் கமல்?

நேற்று சென்னையில் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் தின நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

கருணைக்கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு

தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மனிதர்களை நிபந்தனையுடன் கருணைக்கொலை செய்ய அனுமதித்து சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது