சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்தி கொலை: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற மாணவியை இளைஞர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி மாணவி அஸ்வினி உயிரிழ்நதார். மாணவி அஸ்வினியை கொலை செய்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்த நபரின் பெயர் அழகேசன் என்று தெரியவந்துள்ளது.
மாணவி அஸ்வினியை அழகேசன் என்பவர் எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout