சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது

இந்த நிலையில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள், காவல்துறையின,ர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

More News

காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

புதிய சுற்றுச்சூழல் விதிகள் குறித்து நடிகர் கார்த்தியின் ஆக்கபூர்வமான பதிவு!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய சுற்றுச்சூழல் விதி குறித்து கடும் எதிர்ப்புகளை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட

நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!

கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது.

த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார்.