சென்னையில் அடுத்த வாரம் முதல் சுட்டெரிக்கும் வெயில்!
- IndiaGlitz, [Friday,May 12 2017]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மேலும் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வெயில் மேலும் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையின் சில பகுதி உள்பட தமிழகத்தின் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக உள்ளது வெதர்மேனின் வெப்பநிலை அறிக்கை. சென்னையில் இன்னும் ஒருசில நாட்களுக்கு மேகமூட்டம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும், வரும் திங்கள் முதல் படிப்படியாக இன்னும் வெயில் அதிகரித்து அதிகபட்சமாக 40C வரை வெப்பம் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வெதர்மேன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னையில் வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நிலத்தடி நீரின் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் கடும் தண்ணீர்க்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வார வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் என ஏதாவது குளிர்ப்பிரதேசத்துக்கு சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும்