குப்பையில் மின்னிய தங்கத்தைப் பார்த்தும்… பெண் ஊழியர் செய்த அசத்தல் காரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அடுத்த திருவெற்றியூர் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை பிரிக்கும்போது அதிர்ஷ்டவசமாக 100 கிராம் தங்க நாணயம் கிடைத்திருக்கிறது. இதைப்பார்த்த பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்து அதிகாரிகளையே மிரள வைத்திருக்கிறார்.
திருவெற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் வசித்துவரும் கணேஷ் என்பவர் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு துணிப்பையில் முடிந்து வைத்துள்ளார். அதை ஆயுதபூஜைக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பழைய துணி என நினைத்து தவறுதலாக குப்பையில் எறிந்துவிட்டனர். இதனால் பதறிப்போன கணேஷ் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து திருவெற்றியூர் நகராட்சி ஊழியர்களுக்கு இந்தத் தகவல் பரிமாறப்பட்டு இருந்தது. இந்நிலையில் நகராட்சி குப்பைகளை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்பவரின் கையில் 100 கிராம் தங்கம் நாணயம் கிடைத்ததை அடுத்து, அவர் தனது மேலதிகாரிகளிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் உரியவர்களிடம் தங்கம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் 100 கிராம் தங்க நாணயத்தைப் பார்த்தும் அதை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த மேரியை அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout