அண்ணியின் தங்கையை நம்பவைத்து... இளைஞர் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சொந்த சகோதரரின் மனைவியின், தங்கை தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம் பகுதியை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டில் தங்கி, கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சந்தோஷ். இவருக்கு தன்னுடைய சகோதரர் மனைவியின் தங்கை, அகிலா மீது ஒரு தலை காதல் இருந்துள்ளது.
அகிலா, சென்னை பல்லாவரம் பகுதியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்துவந்தார். அதனால் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய சகோதரியை பார்ப்பதற்காக, சிட்லபாக்கதில் உள்ள அக்கா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது சந்தோஷுக்கு அகிலா மீது காதல் அதிகரித்துள்ளது.
அப்படியாவது தன்னுடைய காதலை அகிலாவிடம் தெரிவிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தார். அப்போது தன்னுடைய அண்ணன் அண்ணியின் பிரசவத்திற்காக அவரை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று உள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி அகிலாவிடம் நைசாக பேசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சந்தோஷ், தன்னுடைய காதலை கூறியுள்ளார். ஆனால் அகிலா தான் வேறு ஒருவரை காதலித்து வருவதால், காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும் உடனடியாக அந்த இடத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அவரை தடுத்து நிறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். சந்தோஷ் பேச்சுக்கு அகிலா உடன்படாததால், அவரின் கழுத்தை நெரித்து கடந்த 9 ஆம் தேதி கொலை செய்தார்.
மேலும் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக, 10 ஆம் தேதி அன்று அகிலாவின் நெற்றியை, கதவில் மோதி மயக்கம் அடைந்து விட்டதாக கூறி அனைவரையும் நம்ப வைத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின் சந்தோஷின் பேச்சில் சந்தேகம் ஏற்படவே அவரை துருவி துருவி விராசனை செய்ததில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments