சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து போவதால் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று
இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இன்று அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைக்கவும் சென்னை வந்த பிரதமர் மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைத்தார். இனி சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என்றே அழைக்கப்படும்
முன்னதாக சென்னை கிளாம்பாக்கம் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு கூட்டணி தலைவர்கள் நினைவு பரிசையும், செங்கோலையும் பரிசாக அளித்தனர். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout