திரும்பி வருவோம்னு சொன்னோம் இல்ல? தல தோனியின் உற்சாகமான பேச்சு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆப்க்கே தகுதிப்பெறாமல் பாதியில் வெளியேறியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் 2021 ஐபிஎல் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று முதல் ஆளாக ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறது சிஎஸ்கே.
இதனால் சிஎஸ்கே கேப்டன், அதன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் உற்சாகத்தில் திளைத்து வருவதைப் பார்க்க முடிகிறது. நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்றார். ஆனால் அவர் பவுலிங்கை தேர்வு செய்ததால் ஹைத்ராபாத் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தது.
பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே டுபிளசிஸ் மற்றும் கெய்க்வாட் கூட்டணி 3 ஓவர் வரையில் பொறுமை காத்து பின்னர் அதிரடி காட்டினர். அடுத்துவந்த மொயின் அலி, ருத்ரவாஸ், சுரேஷ் ரெய்னா என எல்லோரும் அணியின் ரன் ரேட்டிங்கை கணிசமாக உயர்த்திய நிலையில் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது கேப்டன் தோனி தனது பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அணியை வெற்றிப்பெற செய்தார். இதனால் 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை குவித்தனர்.
நேற்றைய வெற்றிக்குறித்துப் பேசிய தல தோனி “கடந்த சீசனில் நாங்கள் அதிக ஆபத்தில் இருந்தோம். மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினோம். இந்த ஆண்டு நாங்கள் அதைச் செய்துள்ளோம். அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவுலிங், பேட்டிங் என அனைத்து துறைகளையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான பொறுப்புகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.
அணியின் இந்த நிலைக்கு வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்ஸ்க்கு முழு கிரெடிட் செல்ல வேண்டும். கடந்த 2020 சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்த முறை அவர்களின் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தோனி கூறினார்.
தல தோனி சிஎஸ்கே வெற்றிக்குறித்து பேசியபோது ரசிகர்களைப் பற்றியும் பேசியதால் சிஎஸ்கே ரசிகர்கள் படு உற்சாகத்தில் திளைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments