38 வயது திருமணமாகாத பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த தொழிலதிபர்: பின்னர் நடந்த விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
38 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருந்த பெண் ஒருவருக்கு இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுத்ததோடு விரைவில் அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்த சென்னை தொழிலதிபர் ஒருவர் தற்போது அந்த பெண்ணால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த 39 வயது பாலச்சந்திரன் என்ற தொழிலதிபர் சென்னை, மும்பை, துபாய் ஆகிய இடங்களில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு 32 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்றும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து சேர்ந்துள்ளதாகவும் விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அந்த பெண் கூறியதை அடுத்து அவர் மேல் தொழிலதிபருக்கு பரிதாபம் ஏற்பட்டது.
இதனிடையே இருவருக்குமிடையே நட்பு அதிகமாகி நாளடைவில் கணவன் மனைவி போல் வாழ்ந்து உள்ளனர். இந்த நிலையில் தொழிலதிபர் தனது அம்மாவிடம் பேசி தனது குழந்தைகளுக்காக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவருடைய அம்மாவின் சம்மதத்தையும் பெற்றார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததை அடுத்து இருவரும் ஒன்றாக வெளியே செல்ல ஆரம்பித்தனர். அது மட்டுமின்றி தனது வருங்கால மனைவி தானே என்று அவரிடம் தன்னுடைய கிரெடிட் கார்டு லேப்டாப் முதலிவற்றை கொடுத்து அவர் கேட்கும் போதெல்லாம் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போதுதான் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர் ஈரோடு மாவட்டம் அருகில் உள்ள ஒரு ஊரில் பஞ்சாயத்து தலைவராக பத்து வருடங்கள் இருந்துள்ளார் என்றும் அது மட்டுமின்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இதுகுறித்து அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டபோது ’இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசில் காட்டி புகார் தருவதாக மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments