சீனாவில் கொரோனா பாதிப்பு: சென்னை வியாபாரிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

சீனாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 1500க்கும் மேற்பட்ட சீனர்கள் பலியாகி உள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனா மட்டுமின்றி சீனாவின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது மட்டுமன்றி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது இதனால் சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கடந்த ஒரு மாதமாக ஏற்றுமதி ஆகவில்லை என கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்டில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சீனாவில் இருந்து வரவேண்டிய சரக்குகள் வரவில்லை என்பதால் வியாபாரம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் தற்போது இருக்கும் ஸ்டாக்குகளை வைத்து சமாளித்து வருவதாகவும் இன்னும் ஒரு மாதம் இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் பெருமளவில் வியாபாரம் பாதிக்கும் என்றும் வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியாவிலேயே கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

2020 – 2021 க்கான தமிழக பட்ஜெட் – எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் துணை முதலமைச்சரும் &

உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது: ஒரு பிரபல இயக்குனரின் வேதனை பதிவு

தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனது படத்தின் மூலம் சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்

'மாஸ்டர்' பாடலை முத்தம் கொடுத்து கொண்டாடிய அட்லி மனைவி!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை: சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி!

சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பைகளில் ஒன்று சென்னை மெட்ரோ ரயில் என்று கூறினால் அது மிகையாகாது. குறைவான கட்டணத்தில் எந்த விதமான போக்குவரத்து பிரச்சினையுமின்றி

கோவையில்.. மாலை போட்டு.. நாய்க்கு தாலி கட்டிய பாரத் சேனா அமைப்பினர்..!

பாரத் சேனா சார்பில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.