ஒரே துணியில் தூக்கில் தொங்கிய அண்ணன் - தம்பி: சென்னையில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஆகாஷ் மற்றும் இருதயராஜ் ஆகிய அண்ணன் தம்பி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆரோக்கிய ஆகாஷ் தான் தற்கொலை செய்யப் போவதாக தனது நண்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் உடனடியாக ஆரோக்கியஆகாஷ் சகோதரர் இருதயராஜூடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய ஆரோக்கிய ஆகாஷை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த நிலையில் தனது சகோதரர் தற்கொலை குறித்து பெற்றோருக்கு தகவல் சொல்வதாக கூறிவிட்டு இருதயராஜ் வீட்டுக்குள் சென்றாலர் ஆனால் வெகு நேரமாகியும் இருதயராஜ் வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் உள்ளே சென்று பார்த்தபோது ஆரோக்கிய ஆகாஷ் தற்கொலை செய்து கொண்ட அதே துணியில் இருதயராஜூம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் ஆரோக்கியஆகாஷ் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தார் என்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டிலேயே வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் என்றும் இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது
இந்த நிலையில் சகோதரர் உயிர் இழந்த துக்கம் தாங்காமல் இருதயராஜும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பதவியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments