பாடி பாலத்தில் கடுமையான டிராபிக்: திருந்தாத சென்னை மக்கள்
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததை அடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முண்டியடித்தனர். தீபாவளி, பொங்கல் விடுமுறை விட்டது போல் அதை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது போன்று அனைவரும் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் சமூக விலகல் என்ற நடைமுறை கேள்விக்குறியாக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னரும் கூட அதனை சரியாக பொதுமக்கள் பின்பற்றாததால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் சாத்தியமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பாலங்களில் ஒன்றான பாடி மேம்பாலம் அருகே இன்று காலை பொதுமக்கள் திரளாக வாகனங்களில் சென்று கொண்டிருந்ததால் திடீரென போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்த 144 தடை உத்தரவை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டு அலட்சியப்படுத்தி வருகின்றனர் என்பதையே இது காட்டுவதாக தெரிகிறது. பிஸியான வேலை நாளில் இருப்பது போன்று பாடி மேம்பாலம் டிராபிக்கில் சிக்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா குறித்த ஆபத்தை உணராமல் சென்னை பொது மக்கள் இவ்வாறு அலட்சியமாக இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
#Chennai Padi Flyover#lockdown and #StayHome are mere words in Chennai now.... pic.twitter.com/SbwXRHedt0
— Mugilan Chandrakumar (@Mugilan__C) April 1, 2020