உலகை வியக்க வைத்த இசை: 12 வயது சென்னை சிறுவரின் சாதனை
- IndiaGlitz, [Friday,February 15 2019]
இசை குறித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தற்போது பல தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருவது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இசை திறமையுள்ள சிறுவர், சிறுமியர்கள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவர் லிடியான் நாதஸ்வரம் என்பவர் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் தனது அபாரமான இசைத்திறமையை வெளிப்படுத்தி ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்ற இசை மேதைகள் நடுவர்களாக இருந்த இந்த இசை நிகழ்ச்சியில் லிடியான் நாதஸ்வரம் பல்வேறு வேகத்தில் பியானோ வாசித்து அசத்தினார். அவருடைய கைவிரல்கள் பியானாவில் செய்த இசை நடனத்தை பார்த்து நடுவர்க்ளும் பார்வையாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த சிறுவரின் அபார இசைத்திறமையை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகரும் பாடகருமான ஜேமஸ் கார்டென், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் பெஸ்ட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுவருக்கு நம்மூரில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சிறுவருக்கு பாரட்டு தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
This is genuinely one of the best things I’ve ever seen live. pic.twitter.com/FY5LH6vxfI
— James Corden (@JKCorden) February 8, 2019