கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்!
- IndiaGlitz, [Sunday,May 01 2022]
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சூரிய பிரசன்னா என்பவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவருக்குப் பல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரூபிக் க்யூப் எனப்படும் கனசதுரத்தின் வண்ணங்களை சேர்ப்பது மிகவும் சவாலான காரியம். மனஒருமைப்பாடுடன் தொடர்புடைய இந்த விளையாட்டில் சிலர் மட்டுமே சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அடுத்த கொளத்தூர் பகுதியிலுள்ள செந்தில்குமார், ராஜேஸ்வரி தம்பதிகளின் 7 வயது மகன் சூரிய பிரசன்னா என்பவர் சைக்கிள் ஓட்டிக்கொண்ட 219 முக்கோண க்யூப்களை வெற்றிகரமாக இணைத்துள்ளார். இதற்காக அவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே சைக்கிள் ஓட்டிக் கொண்டு ரூபிக் க்யூப்களை இணைத்தற்காக சூரிய பிரசன்னாவின் பெயர் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம்பிடித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.