12 வயதில் உலகச் சாதனை படைத்த சென்னை சிறுவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையைச் சேர்ந்த ஜெயதர்ஷன் வெங்கடேசன் எனும் 12 வயது சிறுவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் கனசதுரத்தை தீர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அறிவுத்திறன் கொண்ட விளையாட்டாகக் கருதப்படும் ரூபிக்ஸ் க்யூபை பலரும் அமைதியான சூழலில் இருக்கும்போதே விளையாடுவதற்கு சிரமப்படுகிறோம். இப்படியிருக்கும்போது சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வெறும் 14.32 வினாடிகளில் க்யூப்பிற்கு விடை கண்டுள்ளார். இதனால் கின்னஸ் சாதனை குழு அவருக்கு சாதனை படைத்தற்கான சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளது.
சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ஜெயதர்ஷன் தனது முழங்கையால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த வீடியோவை Guiness world records தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து ஜெயதர்ஷனுக்குப் பலரும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments