இந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள்
- IndiaGlitz, [Monday,December 26 2016]
கடந்த வெள்ளியன்று வெளியான அமீர்கானின் 'டங்கல்', விஷாலின் 'கத்திச்சண்டை', சசிகுமாரின் 'பலே வெள்ளையத்தேவா', ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
1. டங்கல்: பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் எதிர்பார்ப்பை விட அதிகமாக வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டுடன் இந்த படம் சென்னையில் 15 திரையரங்குகளில் 256 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,01,30,540 வசூல் செய்துள்ளது. மேலும் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். தோனி படத்திற்கு பின்னர் சென்னையில் அதிக ஓப்பனிங் வசூலை பெற்ற படம் 'டங்கல்' என்பது குறிப்பிடத்தக்கது
2. கத்திச்சண்டை: சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு நடித்த கத்திச்சண்டை திரைப்படம் சென்னையில் 23 திரையரங்குகளில் 279 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.91,17,630 வசூல் செய்துள்ளது. விஷாலின் சிறந்த ஓப்பனிங் படமான இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர்.,
3. பலே வெள்ளையத்தேவா: முதல்முறையாக முழுநீள காமெடி களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரின் இந்த படம் சென்னையில் 19 திரையரங்குகளில் 207 காட்சிகள் திரையிடப்பட்டது. 70% பார்வையாளர்கள் நிரம்பியிருந்த இந்த படம் ரூ.36,57,340 வசூல் செய்து சுமாரான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.
4. சென்னை 28 II: கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படம் என்று அறிவிக்கப்பட்ட வெங்கட்பிரபுவின் சென்னை 28 II' படம் கடந்த வாரம் சென்னையில் 9 திரையரங்குகளில் 86 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.14,15,920 வசூல் செய்துள்ளது. சென்னையில் இந்த படம் ரூ.3,18,45,820 மொத்த வசூலை பெற்று வெற்றிப்படமாக கம்பீரமாக வலம் வருகின்றது.