கொரோனா ஒழிப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டியான சென்னை: தமிழக அரசின் சாதனை

சென்னையில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்த்து இந்தியாவே ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பதும் இந்தியாவிற்கே சென்னை ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழக பாதிப்பில் 75%க்கும் மேல் சென்னையில் மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை 12 மண்டலமாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் வீடு வீடாக சோதனை செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி இதற்காகவே முதல் கட்டமாக 200 கோடி ரூபாயும் மொத்தமாக கொரோனா கட்டுப்பாட்டிற்கு 400 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சோதனையில் மூலம் சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்வரை 100 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் 35 பேருக்கு கொரோனா இருந்தது. ஆனால் தற்போது வெறும் 12 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் இது 5 சதவீதமாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் 3,500 பேருக்கு டெஸ்ட் செய்தால் 1400 பேருக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கும். ஆனால் தற்போது மூன்று மடங்கு அதாவது 13 ஆயிரம் பேர்களுக்கு சோதனை செய்தாலும் வெறும் 1200 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது

மேலும் சென்னையில் கொரோனா பரிசோதனை செய்த மூன்று மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதால் உடனுக்குடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள்

இந்தியாவின் முன்னணி நகரங்களாகிய டெல்லி, பம்பாய், கொல்கத்தா, பெங்களூரு உள்பட பல நகரங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்க முடியாமல் அந்நகரங்களின் மாநகராட்சிகள் திணறி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாகவும் தமிழக அரசின் சுகாதாரத் துறை கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகும் சென்னையில் பெருமளவு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா இல்லாத சென்னையாக மாறும் என்பதும் கொரோனாவுக்கு பயந்து சென்னையை விட்டு வெளியேறிய வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு திரும்பி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

சிம்புவின் 'மாநாடு' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பது தெரிந்ததே

கணவரின் உடலை தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற மனைவி: கொரோனா பயத்தால் மறக்கப்பட்ட மனிதநேயம்

கொரோனா அச்சம் காரணமாக இறந்த கணவரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் உதவி செய்யாததால் சுடுகாட்டிற்கு அவரது மனைவி தனது மகன்களுடன் தள்ளுவண்டியில் தள்ளிச்

திருப்பதி கோயில் முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு: கோயில் மூடப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ப்ரியாமணியின் பாடிபில்டிங்கிற்கு உதவிய கணவர்: வைரலாகும் புகைப்படம்

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான 'பருத்தி வீரன்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக

அர்னாப் உடன் நேரலை விவாதத்தின்போது என்ன செய்து கொண்டிருந்தார் கஸ்தூரி: வைரலாகும் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்கள் குறித்து ஆவேசமாக பதிவு செய்வார் என்பது தெரிந்ததே