விஜய்யின் 'பைரவா' படத்தில் இணைந்த புதிய நடிகை

  • IndiaGlitz, [Tuesday,September 06 2016]

பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் இந்த ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷும், இன்னொரு முக்கிய வேடத்தில் அபர்ணா வினோத்தும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது இன்னொரு நடிகையாக சென்னை மாடல் அழகி திவ்யா தனபால் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் கீர்த்திசுரேஷின் தோழியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து திவ்யா கூறியபோது, 'விஜய் இயற்கையிலே மிகவும் எளிமையானவர். அவருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த டயலாக்குகளை ரிகர்சல் செய்து வரும் நிலையில், விஜய் ஜஸ்ட் தனது டயலாக்கை ஒருமுறை படித்து ஒரே டேக்கில் அபாரமாக நடிக்கும் தன்மையுடையவர். முதல் படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம்' என்று கூறியுள்ளார்.

More News

விஷால்-கார்த்தியுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

வரும் தீபாவளி திருநாளில் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' மற்றும் கார்த்தி நடித்த 'காஷ்மோரா' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்...

சிம்புவுடன் முதல்முறையாக ஜோடி சேரும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன்...

Vijay starts his next with Jayam Ravi

While the whole world was celebrating Great the Vinayakar Chaturthi festival, Director Vijay’s new film with Jayam Ravi in the lead, had an auspicious beginning...

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர்-இசையமைப்பாளர். அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யா தற்போது ஹரியின் இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக...

'அஜித் 57' படத்தின் முக்கிய அப்டேட்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த 30 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்...