மனைவி, மகன்களை கொலை செய்து தற்கொலை செய்த சென்னை வங்கி அதிகாரி: ஆன்லைன் ரம்மியால் விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் பன்னாட்டு வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கு வருடத்திற்கு 25 லட்சம் சம்பளம் என்ற நிலையில் பல லட்சங்களை அவர் சேமிப்பாக வைத்திருந்தார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டதாகவும் இதனால் அவர் சேமித்து வைத்த சுமார் ஒரு கோடி ரூபாய் அதில் இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து கடனை கேட்ட நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் நேற்றிரவு தகராறு முற்றிய நிலையில் மணிகண்டன் தனது மனைவி மற்றும் மகன்களை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நான்கு பேர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு குடும்பமே ஆன்லைன் ரம்மிக்கு பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments