நீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் இத்தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்ட பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வந்தன. தமிழகமும் இத்தேர்வு முறைக்கு பல வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த்து. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கும் இத்தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீட் தேர்வு தயாரிப்புகள் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இக்குறைபாட்டை களைவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தார். இதனால் பல அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தற்போது நிஜமாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் ஆட்டோ டிரைவராக வாழ்க்கை நடத்தி வரும் ஒருவரின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில தேர்வாகி இருக்கிறார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசாணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியினரி மகன் நரசிம்மன் என்பவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் அவருக்கு அரசாணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments