நீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்!!!

 

இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் இத்தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்ட பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டி வந்தன. தமிழகமும் இத்தேர்வு முறைக்கு பல வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த்து. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கும் இத்தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீட் தேர்வு தயாரிப்புகள் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இக்குறைபாட்டை களைவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தார். இதனால் பல அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தற்போது நிஜமாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஆட்டோ டிரைவராக வாழ்க்கை நடத்தி வரும் ஒருவரின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில தேர்வாகி இருக்கிறார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசாணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியினரி மகன் நரசிம்மன் என்பவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் அவருக்கு அரசாணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

More News

ஒரு அறிவிப்புகூட இல்லாம 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சா??? அலற வைக்கும் தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் இஸ்திரி கடை… 9 வகுப்பு மாணவியின் சர்வதேச சாதனை!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் வினிஷா உமாசங்கர் எனும் மாணவிக்கு சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஸ்வீடன் நாட்டு மாணவர் பருவநிலை

பேரறிவாளன் விடுதலை: விஜய்சேதுபதி வெளியிட்ட வீடியோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த 2 பிரபல இயக்குனர்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார்

லஞ்சத்தில் கொழிக்கும் இந்தியா! உலக அளவில் எந்தனையாவது இடம் தெரியுமா???

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 77 ஆவது இடத்தில் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.