சென்னை ஆட்டோ டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.9000 கோடி.. சமரச பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள்..!

  • IndiaGlitz, [Thursday,September 21 2023]

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் திடீரென ரூ.9000 கோடி வரவு வரவு வைக்கப்பட்ட நிலையில் வங்கி அதிகாரிகள் வழக்கறிஞர்கள் மூலம் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற ஆட்டோ டிரைவர் கடந்த 9ஆம் தேதி தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது வங்கி கணக்கில் 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கில் வெறும் ரூ.105 மட்டுமே இருந்தது என்றும் யாரோ தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறார்.

இருப்பினும் தனது வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சோதனை செய்ய அவர் தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினார். பணமும் அவரது நண்பர் வங்கி கணக்கிற்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் தவறாக ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அதிகாரிகள் கண்டுபிடித்து உடனடியாக ராஜ்குமாரிடம் தொலைபேசியில் பேசினார். தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் அதில் உள்ள பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று வங்கி வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையின் முடிவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணத்திலிருந்து ஆட்டோ டிரைவர் செலவு செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அவருக்கு வாகன கடன் வங்கி தரப்பிலிருந்து வழங்கப்படும் என்று கூறி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.