ஜாக்கிரதை மக்களே! மீண்டும் உச்சம் தொடும் சென்னை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் குறைந்து வந்தது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை விட சென்னையில் குறைந்த அளவு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்பதால் சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவதை அடுத்து சென்னை மக்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது
சென்னையில் கடந்த சில நாட்களாக 200க்குள் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 243 என அதிகரித்து உள்ளது சென்னை மக்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 200க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும், மாஸ்க் அணியுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments