'சரோஜா' தயாரிப்பாளருக்கு வெங்கட்பிரபுவின் அடுத்த படம்
- IndiaGlitz, [Thursday,December 15 2016]
வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சென்னை 28 II' திரைப்படம் பணத்தட்டுப்பாடு, வர்தா புயல் போன்ற பிரச்சனைகளையும் மீறி நல்ல வசூல் பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
இந்நிலையில் 'சென்னை 28 II' வெற்றிபடத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கவுள்ளார். இந்த புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரும், வெற்றி பட இயக்குனரும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.