சென்னை 600028 II' ரசிகர்களுக்கு கிடைத்த 4 நிமிட விருந்து

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 'சென்னை 600028 II' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நான்கு நிமிட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தேனியில் நடைபெறவுள்ள ஜெய்யின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பத்து நாட்களுக்கு முன்பே சென்னையில் இருந்து தேனி கிளம்ப அவருடைய நண்பர்கள் முடிவு செய்கின்றனர். பாரில் குடித்து கொண்டே ஜெய், சிவா, பிரேம்ஜி, அஜய், நிதின் சத்யா, விஜய் வசந்த் ஆகியோர் பேசும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த காட்சிகள் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் என்றும், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இவற்றில் எது உண்மை என்பது நாளை படம் வெளிவந்தவுடன் தெரிந்துவிடும்.

எது உண்மையாக இருந்தாலும் 'சென்னை 600028 II' படத்தை ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்று வெளியாகியுள்ள இந்த வீடியோ ஒரு விருந்தாகவே கருதப்படுகிறது.