சென்னை-28 இரண்டாம் பாகத்தில் 6 இயக்குனர்கள்

  • IndiaGlitz, [Saturday,June 18 2016]

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அனைவருமே கிட்டத்தட்ட இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஐந்து இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'நளனும் நந்தியும்' படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கடேஷ், 'வடகறி' படத்தை இயக்கிய இயக்குனர் சரவணா, 'கனிமொழி' படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீபதி, 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தை இயக்கிய இயக்குனர் சந்த்ரு, 'காவல்' படத்தை இயக்கிய இயக்குனர் நாகேந்திரன் ஆகியோர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபுவையும் சேர்த்து மொத்தம் ஆறு இயக்குனர்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட்பிரபுவின் சொந்த நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, விஜய் வசந்த், வைபவ் ரெட்டி, மகத், விஜயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்-விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை. சொன்னது யார் தெரியுமா?

நடிகராக வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டில் நுழைந்து பின்னர் மேனேஜர், நிர்வாகத்தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் செந்தில்...

சீயான் விக்ரம் 'இருமுகன்' டீசர் ரிலீஸ் தேதி

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷின் 'வடசென்னை'யில் விஜய் பட வில்லன்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வரும் டேனியல் பாலாஜி, பத்து வருடங்களுக்கு பின்னர் விஜய்யை மீண்டும் சந்தித்ததாகவும், பத்து வருடங்களுக்கு பின்பும் அதே பாசத்துடன் தன்னை வரவேற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்ததை சில நாட்களுக்கு முன் பார்த்தோம்.

உலகிலேயே முதல்முறையாக விமான பயணத்துடன் 'கபாலி' படம்...!!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் யாரும் எதிர்பாராத பல வினோதங்கள் நடக்கும் என்பதை ஏற்கனவே ரஜினி படங்கள் வெளியானபோது பல சம்பவங்களை நாம் அனுபவித்துள்ளோம்...

கபாலி: சூப்பர் ஸ்டார ரஜினியின் முதல்முயற்சி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் இரண்டு டீசர்களும் படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியுள்ள நிலையில்...