ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்ன? ஆட்சியை பிடிப்போம்.. விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Thursday,September 28 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது ’லியோ’ அப்டேட் வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்றும் மாலை 6 மணிக்கு கூட இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செங்கல்பட்டு விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ’ஆடியோ லான்ச் இல்லைனா என்ன.. ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு .. என்ன நண்பா’ என்ற வாசகங்கள் இருப்பதை அடுத்து இந்த வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பூஸ்ட் ஆக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.