பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!
- IndiaGlitz, [Wednesday,July 13 2022]
பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக போஸ்கோ உள்ளிட்ட பல சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ளது என்பதும் உலகம் முழுவதும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலியல் குற்றங்களுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. 2013 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 16,000 பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குறுகிய கால தண்டனைக்கு பிறகு இவர்களில் பலர் மீண்டும் அதே குற்றத்தை திரும்பச் செய்வதால் இந்த மசோதாவை தாய்லாந்து பாராளுமன்றம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தென்கொரியா, ரஷ்யா, எஸ்தோனியா மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஆண்மை நீக்கம் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் மசோதா இந்தியாவிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.