விஜய்யின் வேற லெவல்தான் செல்லாக்குட்டி. ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Sunday,November 01 2015]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்காக விஜய் ஒரு பாடலை பாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த பாடல் குறித்து தற்போது ஜி.வி.பிரகாஷ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். 'விஜய் பாடிய செல்லாக்குட்டியே என்ற இந்த பாடல், 'செல்லாக்குட்டியே ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என் செல்லாக்குட்டியே' என்று தொடங்குவதாகவும், இந்த பாடலில் விஜய்யின் பாடும் ஸ்டைல், வேற லெவலாக இருந்ததாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

மேலும் விஜய், சமந்தா பாடும் டூயட் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலின் படப்பிடிப்பு ஏற்கனவே ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்டமாக நடந்துள்ளதாகவும், இந்த பாடலின் சிஜி பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடலின் விஷுவல் ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்றும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.