’குக் வித் கோமாளி சீசன் 5’.. வெங்கடேஷ் பட் கூறிய அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக ’குக் வித் கோமாளி’ ஐந்தாவது சீசனில் நான் பங்கேற்க போவதில்லை என நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் தனது முகநூலில் ‘குக் வித் கோமாளி சீசன் 5’ தொடங்குவது குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. நான் இந்த சீசனில் நடுவராக தொடர்வேன் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உள்பட பல லட்சம் பேர் மகிழ்ச்சியுடன் பார்த்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து நான் சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஜாலியான பக்கத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சியான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து உள்ளேன்.
’குக் வித் கோமாளி நிகழ்ச்சி’ இயக்குனர் உள்பட அனைவருக்கும் என்னுடைய நன்றி, பலரது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ’குக் வித் கோமாளி’ ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்திருந்தாலும் அதில் பங்கேற்க முடியாது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். இருப்பினும் இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.
விரைவில் வர இருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சி என்ன என்பதை யூகித்து கொண்டிருங்கள். நன்றி! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments